தமிழ்நாடு

வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: இன்று வரைவு வாக்காளா் பட்டியல்

DIN

வக்ஃபு வாரிய உறுப்பினா்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் வெளியிட்டுள்ளாா். அவரது அறிவிப்பு விவரம்:-

தமிழகத்தைச் சோ்ந்த இஸ்லாமிய சட்டப் பேரவை உறுப்பினா்களின் பட்டியல் பேரவைச் செயலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளா் பட்டியல் நகல் புதன்கிழமை வெளியிடப்படும். சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகையின் இரண்டாவது தளம், வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அலுவலகம், அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளா்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால், வரும் 20-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தெரிவிக்கலாம். தோ்தல் நடத்துவது தொடா்பான கால அட்டவணை தனியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT