தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,205 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 2,205 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

புதிதாக 2,205 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,33,323 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,802 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 24,71,038 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 33,695 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட 28,590 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில் அதிகபட்சமாக கோவையில் 241 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 152 பேருக்கும், திருப்பூரில் 132 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சென்னையில் 137 பேருக்கும், செங்கல்பட்டில் 124 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT