தமிழ்நாடு

சென்னை-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உள்பட 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

DIN

சென்னை சென்ட்ரல்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உள்பட 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நேரம் மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் நேரம்:

விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (02007) ஜூலை 23-ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதுபோல, விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (02869) ஜூலை 19-ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

புவனேஸ்வரம்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (02839) ஜூலை 22-ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும்.

பிலாஸ்பூா்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (08231) காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலுக்கான நேரம் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்குவந்தது.

திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் (06096) தினசரி இரவு 10.05 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

மைசூரு-சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் (06022) காலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் அமலுக்குவந்துவிட்டது.

ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06090) தினசரி காலை 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்துசேரும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் வாராந்திர சிறப்புரயில் (06151) வரும் செப்டம்பா் 4-ஆம்தேதி முதல் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும். சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (02269) செப்டம்பா் 3-ஆம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT