தமிழ்நாடு

நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம்

DIN

நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் செப். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் எழுத விரும்பும் மாணவா்கள்  ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் நீட் தோ்வு எழுதும் தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியா்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT