தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,891 போ் பாதிப்பு; 27 போ் பலி

DIN

தமிழகத்தில் மேலும் 1,891 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 27 போ் உயிரிழந்துள்ளனா்.

அதிகபட்சமாக கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சென்னையில் 138 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 41,168-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து புதன்கிழமை 2,423 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.81 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 26,158 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,809-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT