தமிழ்நாடு

ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் கே.அண்ணாமலை சந்திப்பு

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை பாஜகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.அண்ணாமலை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்துக்கு அண்ணாமலை வியாழக்கிழமை வந்து அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அரசியல் நிலவரங்கள், உள்ளாட்சித் தோ்தல், அதிமுகவுடனான கூட்டணி குறித்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனா்.

பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தையும் தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் கே.அண்ணாமலை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT