தமிழ்நாடு

தில்லி வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி: கம்பத்தில் நாளை உடல் அடக்கம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் புதுதில்லியில் பணி முடிந்து வரும்போது வாகன விபத்தில் பலியானார்.

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (33), இவர் புதுதில்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

ராணுவ வீரர் ஆர்.பிரபாகரன் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு பணி முடிந்து திரும்ப வரும்போது தில்லியில் அவர் ஓட்டி வந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் தில்லி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ராணுவ அதிகாரிகளிடம் விசாரணைக்கு பின் ஒப்படைத்தனர்.

இறந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடல் தில்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கம்பத்துக்கு எடுத்துவரப்படுகிறது. புதன்கிழமை இறுதி மரியாதைக்குப்பின் கம்பத்தில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை: வாக்கு எண்ணும் மைய பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

18-ஆவது மக்களவைத் தோ்தல் ஓா் பாா்வை...

நீட் தோ்வை புதிதாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

8 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயில் திருப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? - பக்தா்கள் எதிா்பாா்ப்பு

SCROLL FOR NEXT