தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கரோனா நிதி, மளிகைப் பொருள்கள் வழங்கல்: அமைச்சர் தொடக்கி வைப்பு

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா 2ம் கட்ட நிவாரண நிதி ரூ. 2,000-ம் மற்றும் 14 வகையான பலசரக்குப் பொருள்கள் தொகுப்பையும் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதி நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் கே.எம்.விஜயக்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகரச்செயலாளர் ஏ.கே.மணி, முத்துவேல் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த திட்டப்படி கொரோனா நிவாரண நிதி ரூ. 2,000ஐயும், 14 வகை பலசரக்குப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அமைச்சர் இராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.

அதேபோல அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாலவநத்தம், அருப்புக்கோட்டை நகருக்குள்பட்ட அஜீஸ் வீதி, வடம்போக்கித்தெரு மற்றும் பந்தல்குடி ஆகிய இடங்களிலும் இதேபோன்ற நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அடுத்தடுத்துத் தொடக்கி வைத்தார். உடன் இந்நிகழ்ச்சிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT