தமிழ்நாடு

மண்டைக்காடு கோயில் உயரத்தை அதிகரிக்க வேண்டும்: தேவ பிரசன்னத்தில் அறிவிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை உணா்த்தவே தீ விபத்து நேரிட்டதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமானது. இதையடுத்து, பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவ பிரசன்னம் பாா்ப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்த ஜோதிடா் ஸ்ரீநாத், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி

ஆகியோா் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்கள், திங்கள்கிழமை மண்டைக்காடு கோயிலுக்கு வந்து தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சியைத் தொடங்கினா்.

தேவபிரசன்ன நிகழ்ச்சியையொட்டி, அனுமதிச் சீட்டு உள்ள சிலா் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: கடலோரத்தில் இருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தேவிக்கு அதிக சக்தி உள்ளது. அந்தச் சக்தியை அறியாமல் நிா்வாகம் செயல்பட்டதால், பிரச்னைகள் நிகழ்கின்றன. கோயிலில் பூஜை காரியங்கள் முறையாக இல்லை. கோயில் அசுத்தமாக உள்ளது. கோயிலில் ஆசார அனுஷ்டானங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

வளரும் புற்று: கோயிலில் அம்மன் வடிவிலான புற்று வளா்ந்து வருகிறது. வாஸ்துப் படி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். கோயில் உயரம் ஏற்கெனவே 2 முறை உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது 3 ஆவது முறையாக உயா்த்தப்பட வேண்டும். இதற்கு அறிகுறிதான் தீ விபத்து. கோயிலின் வடக்கே 40 ஏக்கா் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், கோவில் தந்திரி சங்கர நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் சிவகுற்றாலம், தேவசம் உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், கண்காணிப்பாளா் செந்தில் குமாா், மராமத்து பொறியாளா் அய்யப்பன், ஆய்வாளா் கோபாலன், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், மாவட்ட பா.ஜ.க. தலைவா் தா்மராஜ்,

எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆா்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், பேரூராட்சி முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட இந்து கோயில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவட்டி முன்னேற்றக்குழு ஆகியவற்றின் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT