தமிழ்நாடு

அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவுநாள்: ஸ்டாலின் உருக்கமான பதிவு

DIN

சென்னை: மறைந்த திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவுநாளினை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமான அஞ்சலி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம் போல உறுதியாகப் பற்றி நின்று, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தைக்  காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கழகத்தில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் இனமானப் பேராசிரியர்.

குடும்பப் பாசம் மிகுந்த இயக்கமான தி.மு.கழகத்தில் தலைவர் கலைஞரிடம் எந்தளவுக்கு இயக்கப் பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பா’ பேராசிரியரிடமும் பயிற்சியினைப் பெற்றேன். அந்தப் பயிற்சிதான் இன்று தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக - பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக - தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக - இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம்  பரப்பிய - பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத - பிற்போக்கு - அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க - சுயமரியாதைமிக்க - சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT