தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 அன்று பொதுவிடுமுறை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல்  மற்றும் பிரசாரப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் உயர்வதற்கு இது காரணமாக அமையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அதன்பொருட்டு எடுத்துவரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த முடிவு பார்க்கபப்டுகிறது.   

முன்னதாக தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135 பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; அனைவருக்கும் வாக்களிக்க ஏதுவாக தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT