தமிழ்நாடு

2.08 லட்சம் பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பம்: சத்ய பிரத சாஹு

DIN


சென்னை: தமிழகத்தில் அஞ்சல் முறையில் வாக்களிக்க இதுவரை 2.08 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் அஞ்சல் முறையில் வாக்களிக்க இதுவரை 2,08,963 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 49,114 ஆயிரம் பேர்  மாற்றுத் திறனாளிகள் ஆவர்.  80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் சுமார் 1.59 லட்சம் பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் இதுவரை 35 ஆயிரம் பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் 12ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணிக்கு நிறைவு பெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT