காங்கயத்தில், குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை மீட்கும் தீயணைப்புத்துறை வீரர்கள்.  
தமிழ்நாடு

காங்கயம்: குடியிருப்பில் புகுந்த பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

காங்கயத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கட்டுவிரியன் பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்து, வனப் பகுதியில் விட்டனர்.

DIN

காங்கயத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கட்டுவிரியன் பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்து, வனப் பகுதியில் விட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், 2ஆவது வார்டுக்கு உள்பட்ட பாரதியார் வீதியில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 4 அடி நீளத்தில், கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் வகையை சார்ந்த பாம்பு ஒன்று, குடியிருப்பு பகுதியில் புகுந்தது. 

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ம.சுப்பிரமணியம் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பைப் பிடித்து, காங்கயம் அருகே, ஊதியூர் மலைப் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாகக் கொண்டுபோய் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மானே... ஜான்வி கபூர்!

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

SCROLL FOR NEXT