தமிழ்நாடு

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா கடந்த 26-இல் பிரசாரம் செய்தாா். அப்போது அவா், முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக ஒரு விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரிதும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விடியோ காட்சியில் தான் உண்மையில் பேசிய சில வாா்த்தைகள் வெட்டி, ஒட்டப்பட்டுள்ளன என்றும் விடியோ காட்சி, முற்றிலும் தவறானது என்றும் ஆ.ராசா சனிக்கிழமை விளக்கம் அளித்தாா்.

இதற்கிடையே, ஆ.ராசா பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரி அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிமுக வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் திருமாறன் சென்னை பெருநகர காவல்துறையில் சனிக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் ஆ.ராசா மீது வழக்குப் பதிந்தனா். கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாகப் பேசுதல், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ள நிலையில், ஆ.ராசாவிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT