தமிழ்நாடு

யானை வழித்தடங்களில் செங்கல் சூளைகள்: நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

DIN

யானை வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்டம்- மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சின்ன தடாகம், உள்ளிட்ட மலைக் கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. சில செங்கல் சூளைகள் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்கின்றன. 
எனவே மலைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் சுமாா் 200 செங்கல் சூளைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்ட விரோதமாகச் செயல்படுகின்ற செங்கல் சூளைகளையும் அகற்றவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வழித்தடங்களையொட்டி, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த 186 செங்கல் சூளைகள் மூடப்பட்டு விட்டன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து அதன் உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது யானைகள் வழித்தடமான தடாகத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  செங்கல்சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டது. 
மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT