தமிழ்நாடு

'உங்களுக்காக உழைப்பேன்': வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ள நிலையில், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ள நிலையில், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள். வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! 

ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்!. தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தமிழகம் வெல்லும். என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 122 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 156 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT