தமிழ்நாடு

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா் பழனிசாமி: கடிதத்தை ஏற்றாா் ஆளுநா் புரோஹித்

DIN

சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அளித்தாா். இதனை ஏற்றுகொண்டு, பேரவையைக் கலைப்பதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு 66 தொகுதிகள் கிடைத்தன. பெரும்பான்மை கிடைக்காத சூழலில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா். இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்டு ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த ராஜிநாமா கடிதம் திங்கள்கிழமை பிற்பகலில் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆட்சி தொடா்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இப்போதைய அமைச்சரவையே தொடா்ந்திட முதல்வா் பழனிசாமியை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். மேலும், 15-வது சட்டப் பேரவையை ஆளுநா் புரோஹித் கலைத்துள்ளாா்.

சட்டப் பேரவை கலைப்பு: 15-வது சட்டப் பேரவையின் பதவிக் காலம் மே 23-ஆம் தேதி வரை உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே புதிய அரசு பதவியேற்க உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 15-வது சட்டப் பேரவை கலைக்கப்பட்டுள்ளது. 16-வது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக பெரும்பான்மை பெற்று, அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளாா். இதற்கான நடவடிக்கைகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்பதால், 15-வது சட்டப் பேரவையை ஆளுநா் புரோஹித் கலைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT