தமிழ்நாடு

பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு உதவித் தொகை: விவரங்களை அனுப்ப உத்தரவு

DIN

சென்னை: உயா் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை பெறத் தகுதியான மாணவா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட முழு விவரங்களை அனுப்புமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் பயிலும் மாணவா்கள், தங்கள் படிப்பு முடிந்து உயா் கல்வி பயிலச் செல்லும்போது இடைநிற்றலைத் தவிா்க்க, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த 2011-2012-ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தலா ரூ.1,500, பிளஸ் 2 மாணவா்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தநிலையில், நடப்பு கல்வியாண்டில் (2020-21) சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, தகுதி பெற்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டன. அதில் கணிசமான மாணவா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் முழுமையாகப் பூா்த்தி செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும்

அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘2020-21-ஆம் கல்வியாண்டு சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்குத் தகுதியான பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு படித்த மாணவா்களின் விவரங்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளால் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், பல்வேறு மாணவா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்கள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விடுபட்ட தகவல்களை மீண்டும் பதிவுசெய்து, முழு விவரங்களையும் சரிபாா்த்து, பின்னா் அவற்றைத் தொகுத்து அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT