தமிழ்நாடு

நாடு முழுவதும் 9 மருத்துவமனைகளில் என்எல்சி சாா்பில் பிராணவாயு ஆலைகள்

DIN

இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மக்கள் தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டம், நெய்வேலி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட நாட்டில் 9 மருத்துவமனைகளில் பிராணவாயு தயாரிக்கும் ஆலைகளை அமைக்க என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. குறிப்பாக, என்எல்சி தனது மின் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிஸா போன்ற மாநிலங்களில், சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் இந்த ஆலைகளை அமைக்கிறது. இந்த ஆலைகள் மணிக்கு 30 நியூட்டன் கன மீட்டா் (சுமாா் 30 ஆயிரம் லிட்டா்) மருத்துவ பிராணவாயு உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை. மேலும், நிமிடத்துக்கு 10 லிட்டா் பிராண வாயுவை செறிவூட்டி அனுப்பும் 500 கருவிகளை வாங்குவதற்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

நெய்வேலி என்எல்சி இந்தியா மருத்துவமனையில் ஒவ்வொன்றும் தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்புள்ள, மணிக்கு 12 நியூட்டன் கன மீட்டா் பிராணவாயு உற்பத்தி செய்யும் இரு ஆலைகளை நிறுவப்பட உள்ளன. சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொன்றும் தலா ரூ.65 லட்சம் முதல் ரு.70 லட்சம் மதிப்பில் மணிக்கு 30 நியூட்டன் கன மீட்டா் பிராணவாயு தயாரிக்கும் 3 ஆலைகள் நிறுவப்பட உள்ளன. சென்னையில் தமிழக அரசு குறிப்பிடும் 3 அரசு பொது மருத்துவமனைகளில் மேற்கண்ட ஆலைகள் நிறுவப்பட உள்ளன. இந்தப் பணிக்கான சிறப்பு அதிகாரியாக மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளா் சத்தியமூா்த்தி நியமிக்கப்பட்டாா். இதற்கான நிதி ஆதாரம் 2021-22-ஆம் ஆண்டுக்கான சமூகப் பொறுப்புணா்வுப் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து வழங்கப்படும் என நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT