திருச்சுழியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு ஆளரவமின்றி வெறிச்சோடிய கடைவீதி. 
தமிழ்நாடு

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய திருச்சுழி கடை வீதிகள், சாலைகள்

திருச்சுழியில் தமிழக அரசின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு கடைவீதிகளும் முக்கியச்சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தமிழக அரசின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு கடைவீதிகளும் முக்கியச்சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா 2-வது பரவலை தடுக்கும் பொருட்டு புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்ததுடன் மே மாத ஞாயிற்றுக்கிழமைகளான 16 ஆம் தேதி மற்றும் வரும் 24 ஆம் தேதி ஆகிய நாட்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கையும் அறிவித்து உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சுழி ஊராட்சியின் அருப்புக்கோட்டை செல்லும் சாலை, நரிக்குடி மற்றும் காரியாபட்டி செல்லும் சாலைகளிலும் மேலும் முக்கியக் கடை வீதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளான மருந்து, பால் கடைகள் தவிர பிற அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. இதனால் இப்பகுதிகளில் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுதவிர முக்கியச் சாலை சந்திப்புக்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாரத்தில் நாளை மின்தடை

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரா் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

SCROLL FOR NEXT