தமிழ்நாடு

கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: அரசாணை வெளியீடு

DIN

தனியார் ஆய்வுக்கூடங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200 - லிருந்து ரூ. 900- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 800-லிருந்து ரூ. 550 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், குழுவாக சென்று கரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600-லிருந்து ரூ. 400 ஆகக் குறைக்கப்படுகிறது. 

வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT