கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனாவைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று அடுத்த அச்சுறுத்தலாக உள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்துக்குக் கூடுதலாக ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கியதற்கு தனது நன்றியையும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.