தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கன அடி உபரிநீா் திறப்பு

DIN


கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து புதன்கிழமை 2,000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இதன் மொத்த நீா்மட்டம் 24 அடியாகும். ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. புதன்கிழமை காலை நிலவரப்படி ஏரியில் நீா் இருப்பு 2 ஆயிரத்து 786 கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், இன்னும் இரு நாள்களில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை, தற்போது 2 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

செம்பம்பாக்கம் ஏரியின் உபரிநீா் செல்லும் வாய்க்கால் செல்லும் கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா். செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து, அங்கு பொதுமக்கள் வராதபடி, போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT