தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐஜேகே கட்சி தனித்துப் போட்டி

DIN


திருச்சி:  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐஜேகே கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார் பெரம்பலூர் எம்பியும், இந்திய ஜனநாயகக் கட்சியின்  (ஐஜேகே) நிறுவனர் தலைவருமான  டி. ஆர். பாரிவேந்தர்.

திருச்சி எஸ்.ஆர்.எம். விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கோயில்கள், தேவாலயங்கள், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு என மொத்தம் ரூ. 66 லட்சத்தில் நிதியுதவிகளை வழங்கி மேலும் கூறியது:

பதவியிலிருக்கும்போது ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் பதவிக்காலம் முடிந்த  பயத்துடன் உள்ளனர். ஊழலற்று நிர்வாகம் செய்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.  

தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் எங்களுக்கு பகையோ உறவோ ஏதுமில்லை. நடுநிலையாக உள்ளோம்.  என்றாலும் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்றார் அவர்.  பெரம்பலூர் தொகுதி எம்பியான இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT