தமிழ்நாடு

பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: கிலோ ரூ.85 - ரூ.100

தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

DIN

தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தக்காளி கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை திடீரென அதிகரித்துள்ளது. 

தக்காளி விலை கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதனால், நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்தநிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், வெளிச்சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும்.

பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் எனக் குறிப்பிட்ட அவர்,  65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT