தமிழ்நாடு

மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மணிமுக்தா நதி அணையிலிருந்து, பாசனத்திற்காக வருகிற நவம்பர் 24 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 79 நாள்களுக்கு  மொத்தம் 550.75 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்னதாக, சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சி கிராமத்தில் 36 அடி உயரம் கொண்ட மணிமுக்தா அணை கடந்த வாரம் பெய்த தொடா் மழை காரணமாக,  முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT