தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள்  கவனமாக  இருக்க ஆட்சியர் வேண்டுகோள்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியர் மா.ஆர்த்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் கூறியது.. கடந்த  அக்டோபர்  மற்றும்  நடப்பு  நவம்பர்   மாதங்களில்  பெய்த  வடகிழக்குப்  பருவ  மழையினால் காஞ்சிபுரம்  மாவட்டத்தில்   பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்  உள்ள  381 ஏரிகளில்  341  ஏரிகளும், ஊராட்சி  ஒன்றியங்களின்  கட்டுப்பாட்டில்  உள்ள   380  ஏரிகளும்  100 சதவிகிதம்  நிரம்பியுள்ளது.

இதனால் உபரி நீரானது  கலங்கல்கள்  வழியாக  செல்கிறது. தற்பொது  பெய்து  வரும்  பலத்த  மழை  காரணமாக  பாலாறு, செய்யாறு,  அடையாறு  ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு  ஏற்படவும்  வாய்ப்புள்ளது. எனவே  பொதுமக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப்பாலங்கள்  மற்றும்  தடுப்பணை  உள்ள  பகுதிகளுக்குச்  செல்ல  வேண்டாம். தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம்.

முக்கியமாக வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர்களையும், கால்நடைகளையும் ஆற்றின்  அருகில்  செல்லாமல்  இருக்கவும், பொதுமக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT