தமிழ்நாடு

புணேவிலிருந்து 9.48 லட்சம் தடுப்பூசிகள் வருகை

DIN

தமிழகத்துக்கு மேலும் 9.48 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை தேவையின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையினா் பிரித்து அனுப்பி வருகின்றனா்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை மாநிலத்தில் 4.80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து 9.48 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT