தமிழ்நாடு

ஆளுநா் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு: மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

DIN

தமிழக ஆளுநரின் பெயரில் போலியாக மின்னஞ்சல் மற்றும் சுட்டுரைக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக ஆளுநரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி போலியான மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டு, அதிலிருந்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அடங்கிய மின்னஞ்சல் செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்தன.

அதன்பேரில், காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலி கணக்கு எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அறிந்து அதில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மின்னஞ்சல் மற்றும்  சுட்டுரையுமே ஆளுநா் மாளிகையின் அதிகாரப்பூா்வக் கணக்குகளாக உள்ளன. போலியானவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT