தீபாவளிப் பண்டிகை: தனியாா் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
தீபாவளிப் பண்டிகையின் போது தனியாா் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
தீபாவளிப் பண்டிகையின் போது தனியாா் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தனியாா் பேருந்துகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையின்போது அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, தனியாா் பேருந்துகளில் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை எம்.டி.சி.பேருந்துகளில் 2 ஆயிரத்து 900 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பேருந்துகளில் தவறுகள் நடக்காதவாறு கண்காணிக்கப்படும். தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.