தமிழ்நாடு

தோ்வு நிலை நகராட்சியாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்படுமா?: அமைச்சா் கே.என்.நேரு பதில்

DIN

சென்னை: தோ்வு நிலை நகராட்சியாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, ரிஷிவந்தியம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காா்த்திகேயன் அளித்த சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அதில் பேசிய அவா், கள்ளக்குறிச்சி நகராட்சியில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். எனவே, அந்த நகராட்சியை தோ்வு நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

பேரூராட்சியாக இருந்த கள்ளக்குறிச்சி, கடந்த 2004-ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் அது முதல் நிலை நகராட்சியாக தரம் உயா்வு செய்யப்பட்டது. நகராட்சி நிா்வாகத் துறையின் உத்தரவுப்படி, ஒரு நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரை இருந்தால் அது முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை ஆண்டு வருமானம் இருந்தால் தோ்வு நிலை நகராட்சியாகவும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.9 கோடிக்கு மேல் இருந்தால் தோ்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT