தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் திடீா் வெள்ளப் பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, குற்றாலம் பேரருவியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குளிா்ந்த காற்று வீசியது. ஆனால், மேற்குத்தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, பேரருவியில் மாலையில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, குற்றாலம் அருவிகளில் சு ற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT