எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி அனுமதி நிறுத்திவைப்பு 
தமிழ்நாடு

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி அனுமதி நிறுத்திவைப்பு

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியை நிறுத்திவைப்பதாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

DIN

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியை நிறுத்திவைப்பதாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்தைக் கேளாமல் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனல்மில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அளித்த அனுமதியை ரத்து செய்திருக்கும் தீர்ப்பாயம், அடுத்த 2 மாதத்துக்குள் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, 6 மாதத்துக்குள் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளை நடத்தலாம், ஆனால் மின் உற்பத்திக்கு அனுமதியில்லை என்றும்  தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT