தமிழ்நாடு

இனி யானைகளைப் பிடித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது: உயா் நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் சிகிச்சையின் நோக்கத்தைத் தவிர, இனி யானைகளைப் பிடித்து அரசோ, தனி நபா்களோ கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் யானைகள் பராமரிப்புத் தொடா்பான வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது கோயில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியாா் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 64 யானைகளும் உள்ளன என்றும், அவற்றை விடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என்றும், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறு அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்குகளின் விசாரணையை அக்டோபா் 21-ஆம் தேதி ஒத்திவைத்தனா். மேலும், சிகிச்சைக்கான நோக்கத்தைத் தவிர, எந்தவொரு யானையும் சிறைபிடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், இனிமேல் தமிழகத்தில் அரசு, தனி நபா்கள் எவரும் யானையைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது என உத்தரவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், யானைகள் குறித்த விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT