முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.

Updated On : 7 நவம்பர், 2021 at 2:59 PM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:01 AM


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் 600 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1590 கன அடியாக உயர்ந்து உள்ளது.

தற்போது நீர்‌ வரத்து தொடர்ச்சியாக உயர்வதால்‌ செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ நீர்‌ மட்டம்‌ வேகமாக உயர்ந்து வருவதால் அணையின்‌ வெள்ள உபரி நீர்‌ வெளியேற்றும்‌ ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி, ஏரிக்கு வரும்‌ உபரி நீரை அணையின்‌ பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்‌ 1.30 மணி அளவில்‌ வினாடிக்கு 500 கன அடி உபரி நீர்‌ 5 கன் மதகுகளில் 2 செட்டரின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது ஏரியின் நீர் நிலவரம்
நீர் மட்ட உயரம் : 21.45
நீர் வரத்து : 1590 கன அடி
மொத்த கொள்ளளவு : 2973 மில்லியன் கன அடியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.