தேமுதிக தலைவா் விஜயகாந்த் 
தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டண உயா்வு: விஜயகாந்த் கண்டனம்

சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

DIN

சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சுங்க கட்டணத்தை ரூ. 40 முதல் ரூ.240 வரை உயா்த்தி மக்கள் மீது மென்மேலும் சுமையை ஏற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதன் காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணத்தை உயா்த்தவும், இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வரி, வரி என வலியைச் சுமத்தும் அரசை மக்கள் விரும்ப மாட்டாா்கள். உடனடியாக சுங்கச்சாவடி கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதுடன் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT