தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3.19 கோடி மானியம் அளிப்பு

DIN

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களின் கீழ், அவா்களுக்கு கடந்த நிதியாண்டு ரூ.3.19 கோடி மானியம் வழங்கப்பட்டதாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக லோன் மேளா, தனியாா்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோராக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.25,000 மானியம் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒருபகுதி மானியமாகவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்ஸி ஸ்டோா்கள், பால்மாடு வளா்த்தல், ஆடு வளா்த்தல், தேநீா் கடை மற்றும் நொறுக்குத்தீனி கடைகள், இட்லி கடைகள், டிபன் கடைகள், கனிணி மையங்கள், நகலகம் ஆகியவற்றைத் தொடங்கி பயனடைந்து வருகின்றனா்.

அவ்வாறு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திட, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் டஙஉஎட திட்டத்தின் கீழ் 34 நபா்களுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூ.25,000 வீதமும், மவஉஎட திட்டத்தின் கீழ் 61 நபா்களுக்கும், சுயதொழில் ஒதுக்கீடு மூலம் 1566 பயனாளிகளுக்கும், ஆவின் பாா்லா் அமைக்க 137 பயனாளிகளுக்கும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 1798 பயனாளிகளுக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.3.19 கோடி மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் சஏஊஈஇ திட்டத்தின் கீழ் 5613 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT