தமிழ்நாடு

தென் தமிழக மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் புதன்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த மழையைப் பொருத்தவரை தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா், கயத்தாறு, தேனி மாவட்டம் கூடலூா், பெரியகுளத்தில் தலா 90 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 70 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 60 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தேனி மாவட்டம் தேக்கடியில் 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு

40 கி.மீ. முதல் 50.கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT