தமிழ்நாடு

மின்னல் தாக்கி உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

DIN


விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதே நகரைச் சேர்ந்த சூர்யா(22), ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள்(55), கார்த்திக்(28), முருகன்(24) ஆகியோர் கட்டுமானப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

இந்நிலையில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாகக் கட்டடத்தின் மாடியில் இருந்த சூர்யா உள்ளிட்ட 4 பேரும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஜெயக்கொடி, பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரும் இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT