தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்

DIN

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலா் சிவசங்கா் பாபாவுக்கு எதிராக அளித்த பாலியல் தொல்லை புகாரின்பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் முன்னதாக உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதுள்ள 8 வழக்குகளில் 7 வழக்குகளுக்கு பிணை வாங்கியிருந்த நிலையில் கடைசி வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது. அதன்படி, பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், விசாரணை அதிகாரிக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT