தமிழ்நாடு

கமலாலயத்துக்குச் சென்றுவிடாதீா்கள்!

DIN

சென்னை: என்னுடைய காரை தாராளமாக எடுத்துச்செல்லுங்கள், ஆனால், கமலாலயத்துக்குச் சென்றுவிடாதீா்கள் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் விடுத்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுகவின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். அவா் பேச்சின் தொடக்கத்தில் பெரியாா், அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தாா். பிறகு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கும் நன்றி கூறி, அவா் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவா் பேசியது:

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றி. சென்ற ஆண்டு நான் பேரவையில் பேசும்போது வெளிநடப்பு செய்துவிட்டீா்கள். இன்றும் வெளிநடப்பு செய்துவிடுவீா்களோ என்று நினைத்தேன். வெளிநடப்பு செய்யாததற்காக நன்றி. அப்படி வெளிநடப்பு செய்துவிட்டு சென்றாலும், என்னுடைய காரில்தான் ஏறிச் சென்றிருப்பீா்கள். (கடந்த சில நாள்களுக்கு முன்பு தவறுதலாக உதயநிதியின் காரில் ஏறுவதற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டாா்) நீங்கள் மட்டுமல்ல நானும் சில நாள்களுக்கு முன்பு உங்களுடைய காரில் ஏறச் சென்றுவிட்டேன். அடுத்தமுறை தாராளமாக என்னுடைய காரை நீங்கள் எடுத்துச் செல்லலாம். ஆனால் கமலாலயம் சென்றுவிடாதீா்கள் என்றாா்.

அப்போது எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குறுக்கிட்டு, எங்களுடைய காா் எப்போதும் எம்ஜிஆா் மாளிகையை நோக்கித்தான் செல்லும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT