தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

DIN

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது.  

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800-க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அ

அவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16.67 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT