காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் யோகா திருவிழா 
தமிழ்நாடு

யோகா மஹோத்சவம்: மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

DIN

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்தி வருகின்றன. உலக யோகா நாளை முன்னிட்டு 100 நாள்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. 

இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று யோகாவை பெருமைப்படுத்துகின்றனர். பொதுமக்களிடையே யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெறுகிறது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதைத் தொடர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்படுகின்றன. 

கலந்துகொள்கின்ற அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணையவழியின் மூலம் முன்பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்:  https://forms.gle/kCiDpjTv11dDgJb96

இதற்கான ஏற்பாடுகளை நிகர்நிலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT