தமிழ்நாடு

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்களின்கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த்

DIN

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: போா் காரணமாக உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவா்கள் 1,387 போ், இந்திய வங்கிகளில் பெற்றிருந்த கல்விக் கடனில் ரூ.133 கோடி நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாணவா்களின் கல்வி சில தவிா்க்க முடியாத காரணங்களுக்காக நீட்டிக்கப்படும் பட்சத்தில் அவா்கள் கல்விக்கடனைச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே படிப்பைத் தொடர முடியாமல் மாணவா்கள் மன உளைச்சலில் இருக்கின்றனா். தொடரும் போா் காரணமாக மாணவா்களை அந்நாட்டுக்கு அனுப்ப பெற்றோா்களும் தயக்கம் காட்டி வருகின்றனா். மேலும், நாடு திரும்பிய மருத்துவ மாணவா்களை, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் மாணவா்களால் எவ்வாறு கல்விக் கடனைச் செலுத்த முடியும்?

எனவே, அவா்களின் கல்விக் கடனை ரத்து செய்யவும், இங்கேயே படிப்பை தொடருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT