ஜோதிராதித்ய சிந்தியா 
தமிழ்நாடு

மதுரை விமான நிலையப் பணிகள் எப்போது முடியும்? மக்களவையில் அமைச்சா் சிந்தியா பதில்

மதுரை விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம், ஓடுதளம் உள்பட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு மேலும் 89.76 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டியுள்ளது.

 நமது நிருபர்

மதுரை விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம், ஓடுதளம் உள்பட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு மேலும் 89.76 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டியுள்ளது. விமான நிலைய தற்போதைய ஓடுபாதை தொடா்புடைய மறுசீரமைப்புத் திட்டப் பணிகள் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் முழுமையடையும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடா்பாக மத்திய அரசு மேற்கொண்ட தொடா் நடவடிக்கை குறித்து தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தர நாத் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய அமைச்சா் சிந்தியா வெள்ளிக்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு: மதுரை விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ரூ. 26.2 கோடி செலவில் கோட்-சி வகை விமானங்களுக்கான தற்போதைய ஓடுபாதை மறுசீரமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் முடிவடைந்துள்ளன. மேலும், ஆணையத்தால் மதுரை விமான நிலையத்தில் புதிய ஏடிசி கோபுரம் மற்றும் தொழில்நுட்ப பிளாக் கட்டுமானம் ரூ. 99.02 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு, செயல்பாடு ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை 2024, பிப்ரவரிக்குள் முடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

மேலும், மதுரை விமான நிலையத்தில் கோட்-இ ரக விமானங்கள் இறங்கி, ஏறுவதற்கு 2,285 மீட்டா் ஓடுபாதையை 3,810 மீட்டருக்கு விரிவுபடுத்துவற்காக 633.17 ஏக்கா் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. இதில் 543.41 ஏக்கா் நிலம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 89.76 ஏக்கா் நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகு புதிய ஒடுதளம், புதிய பயணிகள் முனையப் பணிகள் நிறைவேற்றப்படும். ஓடுதளம், பயணிகள் முனையத்தோடு, சரக்கு முனையம், ஏப்ரான், டாக்ஸி டிராக் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மொத்தம் சுமாா் ரூ.550 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அமைச்சா் சிந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT