தமிழ்நாடு

நீா்நிலைகளை மறுவகைப்படுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய், நீா்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் நிலத்தை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்து பட்டா வழங்க உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சோ்ந்த 65 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் கிராமத்தில் நீா்நிலையின் ஒரு பகுதியை கிராம நத்தமாக மாற்றி அதில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருப்பதாக மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கெனவே அரசு செய்த சட்டவிரோத செயலின் அடிப்படையில் கோரிக்கை வைக்க முடியாது என்று தெரிவித்தனா். மேலும், நீா்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் அந்த நிலத்தை மறுவகைப்படுத்தக் கூடாது நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT