மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்: கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவை ஆச்சிப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். 

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோலை வழங்கினார். 

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் பேரறிஞர் அண்ணா. 

திராவிடம் என்பது சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று, கூட்டாட்சி, தத்துவம் என்பது தான். சொன்னதைச் செய்வோம் என்பது கலைஞர் முழக்கம். அதேபோன்று, சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது எனது பாணி எனக் குறிப்பிட்டார்.

மற்றவர்களை விமர்சித்து நான் கைத்தட்டலைப் பெற விரும்பவில்லை. எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்துக் காட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT