முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானல் - பழனி சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட் 2022, 8:23 am IST
பகிர்:

கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில்  வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

கொடைக்கானல் மற்றும் வில்பட்டி, பெருமாள்மலை, பிரகாசபுரம், பெரும்பள்ளம், வட்டக்கானல், மச்சூா், மயிலாடும் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையால் மின்தடை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments