நடிகர் சிவ நாராயணமூர்த்தி(படம்: டிவிட்டர்) 
தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி(67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். 

DIN


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி(67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இவர் கிருபானந்த வாரியாரின் சிஷ்யராகவும், ஆரம்ப காலகட்டங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மறைந்த நடிகரும், இயக்குநருமான விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்று, முதன் முதலாக தனது திறமையை வெளிப்படுத்திய நிலையில், விசுவால் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் சிவ நாராயண மூர்த்தி. 

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் தனது சொந்த ஊரில் உள்ள வீட்டில் இருந்து வந்த நிலையில் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லதில் காலமானார். 

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டடுள்ளது அவரது உடலுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட கலைஞர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இவருக்கு மனைவி புஷ்பவல்லி, லோகேஷ், ராம்குமார், ஸ்ரீதேவி என்ற மகன்கள், மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT