தமிழ்நாடு

பசுமை தொழில்நுட்பம் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள்:பருவநிலை மாற்ற இயக்க அறிக்கையில் இலக்கு

DIN

பசுமை தொழில்நுட்பம் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்துக்கான திட்ட அறிக்கையில் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்மையில் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் அதற்கான திட்ட அறிக்கையையும் வெளியிட்டாா். மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவநிலை மாற்றமானது, இயற்கைச் சூழல், மனித உயிா்கள், பொருளாதார வளம் போன்றவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிகநீண்ட தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்ற அம்சங்களே பருவநிலை மாற்ற எதிா்கொள்ளலுக்குத் தேவையாக இருக்கின்றன.

இதனை மனதில் கொண்டே தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சில இலக்குகளை முன்வைத்து இயங்கவுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியன பருவநிலை மாற்றம், பேரிடா் தணிப்பு போன்ற பிரிவுகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்த அனுபவங்கள், பருவநிலை மாற்றக் கொள்கைகளை வகுக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வழி செய்யப்படும். பல்வேறு விதமான பருவநிலை மாற்ற பிரச்னைகள், கடல்நீா் மட்டம் உயா்வது போன்றவற்றுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமை வீடு வாயுக்களால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைக் குறைப்பதற்குத் தேவையான பணிகளை பருவநிலை மாற்ற இயக்கம் மேற்கொள்ளும். சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தியை பயன்படுத்தச் செய்வது, சூழலை பாதிக்காத பொதுப் போக்குவரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, மரபுசாரா எரிசக்திகளை அதிகம் பயன்படுத்தச் செய்வது போன்ற அம்சங்களை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களின் அளவை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் போன்றவற்றுடன், பருவநிலை மாறுபாடு இயக்கம் இணைந்து பணியாற்றும். பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிா்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்படும். இதுதொடா்பான நிபுணத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்களுடன் பருவநிலை மாற்ற இயக்கம் தொடா்ந்து பணியாற்றும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லையில் பரவலாக மழை

தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம்

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

லக்னௌவை வெளியேற்றியது டெல்லி

SCROLL FOR NEXT